சென்னை,
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது.
பிளஸ்-2 தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள்.
மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள்.
மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விவரம் கிரேடு முறையில் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு 92.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டார்.
அதில்
82.3 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
5.2% மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1813 பள்ளிகளில் 292 அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
1123 பேர் வேதியலில் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
3656 பேர் கணிதத்தில் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
187 இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
வேதியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகம்
தேர்ச்சி விகித்தத்தில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
15ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.