புதுடெல்லி:

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 பாஜக எம்பிக்கள், ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.


கிழக்கு உத்திரப்பிரதேச பொறுப்பாளராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்ந்து அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் ஆளும் பாஜக திணறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணியும் பாஜகவுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

மேலும் அம் மாநிலத்தில் பாஜக நிர்வாகிகள் பலரும் உத்திரப்பிரதேச முதல் யோகி ஆதித்யநாத்தின் தலைமை பிடிக்காமல் அதிருப்பதியில் இருந்தனர்.
இந்நிலையில், உத்திரப் பிரதேச மாநில் பஹ்ராய்ச் எம்பி சாவித்திரி பாய் புலே மற்றும் ஃபதேபுர் எம்பி ராகேஷ் சசன் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

அப்போது, பிரியங்கா காந்தியும், உத்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜ்யோதித்ய ராஜேயும் உடன் இருந்தனர்.