இட்டா நகர்:
அருணாசல பிரதேச மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதில், 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அருணாசல பிரதேச மாநிலத்தில், வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிவடைந்தது.. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை கடைசி நாள் ஆகும்
இந்த நிலையில், அங்கு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டசபை தொகுதி யில் போட்டியிடும் எர் தபா தெதிர் ஆகியோருக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் முடிவு அடைந்து விட்டபடியால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 11ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.