சென்னை: மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலைவழக்கில் அதிமுக நிர்வாகி ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் நேற்று முந்தினம் மாலை படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், செல்வம் கொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி அருகே சமயபுரம் சுங்கச் சாவடியில் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel