டில்லி:
நாடு முழுவதும் இதுவரை 2.75 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் கார்டு அவசியம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, ஆதார் கார்டுட்ன் வங்கி கணக்கு மற்றும் ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி போன்றவற்றையும் இணைக்க உத்தரவிட்டது.
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுகளை டிஜிட்டல் முறையில் மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில், தமிழகத்திலும் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு மூலமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உணவுத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, இதுவரை 2.75 கோடிக்கும் அதிகமான போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த போலி ரேஷன் கார்டுகள், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.