லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயதுக் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை அமைந்துள்ளது.
இங்கு கொரோனா அறிகுறிகளுடன் ஒரு இரண்டரை வயதுக் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த கடைசி இரு சோதனைகளில் கொரோனா நெகட்டிவ் எனமுடிவு வந்துள்ளது.
அதையொட்டி அந்த குழந்தை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel