இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிங்க்’. தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அடுத்ததாக, பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிக்க ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் தெலுங்கில் இப்படம் ரீமேக் ஆகி வருகிறது.
தற்போது இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஜெமினி டிவி தரப்பு ரூ.16.5 கோடிக்கு வாங்கியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓடிடி வெளியீட்டுக்குப் பல தளங்கள் ஆர்வம் காட்டினாலும் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தைத் திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். எனவே, டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை. அதுவும் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிகிறது.