லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தில் அமலுக்கு உள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் கைது செய்ப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  மாத மாற்றத்தை தடுக்க கட்டாய மத மாற்றத் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  2021ம் ஆண்டு ஏப்ரல் 4,  டெல்லியில் வைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது அப்சல் என்ற இளைஞர் வேறு சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடத்தி தனது மத முறைப்படி திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக,  16 வயது சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில்,  அப்சலை டெல்லியில் வைத்துக் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இளைஞன் மேல் கட்டாய மத மாற்றுத் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இநத் வழக்கு உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில்,  குற்றம் சாட்டப்பட்ட அப்சலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.