சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இன்று ஒரே நாளில் 1982 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (12ந்தேதி) புதிதாக மேலும்  1,982 பேருக்குகொரோ  நோய்த் தொற்று   உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 40,698 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,479 பேருக்கு கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மேலும் 18 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. இன்று பலியானவர்களில்  8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 10 பேர்  அரசு மருத்துவமனையிலும் இறந்துள்ளனர்.

இன்று ஒரேநாளில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்தம் எண்ணிக்கை 22,047  ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 18,231 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,73,906 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன