லக்னோ:
த்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு கொரோனா இருப்பதாக சக பயணிகள் கூறியதால், நடுவழியில், சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் படுகாயமடைந்த  அந்த பெண்  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று இளம்பெண் அன்ஷிகா யாதவ் என்பவர் தலைநக்ர டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு தனது தாயுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததாக, சக பயணிகள் புகார்  கூறியதையடுத்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர். பெருந்து சென்றுகொண்டிருந்த யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வண்டியை  நிறுத்தி ஓட்டுநரும், அந்த இளம்பெண்ணை வெளியே தூக்கி வீசியுள்ளனர்.
இதனால் சாலையில் விழுந்த அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அடுத்த 30 நிமிடங்களில் சாலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து  டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் உடனே உ.பி. மாநில போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்று ஒருவாரம்  முடிந்துள்ள நிலையில் தற்போதுதான் வெளியே தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்  மதுரா போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.