சென்னை:

தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா உள்பட 19 தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கும், ஜாங்கிட் கும்பகோணம் போக்குவரத்து கழக கண்காணிப்பு அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கும்பகோணம் போக்குவரத்து கழக கண்காணிப்பு அதிகாரியாக ஜாங்கிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில குற்ற ஆவண காப்பக டிஜிபியாக கரண் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக அஷூதோஷ் சுக்லா நியமனம்
மின்வாரிய கண்காணிப்பு அதிகாரியாக தமிழ்ச்செல்வன் நியமனம்
சீமா அகர்வால், காவல்துறை தலைமையிடஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபய்குமார் , தமிழ்நாடு சிறைத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயந்த் முரளி, சென்னை சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக ராஜேஸ்வரி நியமனம் உள்ளிட்ட 19 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]