சென்னை: தமிழகத்தில் நேற்று 1,797 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இவர்களில் 198 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,797 பேர் புதிதாக கொரோனாவால் பாட்டுள்ளனர. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,94,233 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,610 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், கொரோனா தொற்றில் இருந்து விடுமட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,39,540 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 20,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 2,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் நேற்று புதிதாக மேலும் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இதுவரை 5,41,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2 பேர் கொரோனா தொற்றால் உயிர் இழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,369ஆக அதிகரித்துள்ளது. நேற்று 206 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,30,379 பேர் குணம் அடைந்துள்ளனர்.
18.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 35,54,978 பேருக்கும், 18.08.2021 அன்று 20,240 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: