டெல்லி:

ந்தியாவில் கொரோனா  நோய்த்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3லட்சத்து 80ஆயிரத்து 532 ஆக உள்ளது.  பலி எண்ணிக்கை  12 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  13,586 பாதிக்கப்பட்ட நிலையில்   336 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரையிலான 24 மணிநேரத்தில் 13,586 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.  புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படு வோா் எண்ணிக்கை தொடா்ந்து 8-ஆவது நாளாக பெரிய அளவில்13,586-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,63,248 போ சிகிச்சையில் உள்ளனா். 2,04,711 போ நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா்.

கொரோனாவால் இதுவரை 12,573 பேர் உயிரிழந்த நிலையில் 2,04,711 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 120,504 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5751 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60,838 பேர் குணமடைந்து உள்ளனர்.

2-வது இடத்தில் தமிழகம் தொடர்ந்து உள்ளது.  அங்கு 52,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  625 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28641 பேர் குணமடைந்துள்ளனர்.

3-வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. அங்கு  49979 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1969 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21341 பேர் குணமடைந்துள்ளனர்.

அசாமில் 4777 பேருக்குக்கும்,  பீகாரில் 7025 பேரும்,  சண்டிகரில் 374 பேரும்,  சத்தீஸ்கரில் 1946 பேரும்,  கோவாவில் 705, குஜராத்தில் 25601,  அரியானாவில் 9218,  திரிபுராவில் 1155,  கேரளாவில் 2794,  ராஜஸ்தானில் 13857,  ஜார்கண்டில் 1920,  லடாக்கில் 687,  மணிப்பூரில் 606,  மேகலாயாவில் 44, மிஸ்ரோமில் 130 ,  நாகாலாந்தில் 193 , ஒடிசாவில் 4512 ,  பாணடிச்சேரி 271 , பஞ்சாப்பில் 3615,  உத்தரகாண்ட்டில் 2102. கர்நாடகாவில் 7944.

ஜம்மு காஷ்மீரில் 5555. தெலுங்கானாவில் 6027. மேற்கு வங்கத்தில் 12735. உத்தரப்பிரதேசத்தில் 15181. ஆந்திரப்பிரதேசத்தில் 7518. அருணாச்சலப்பிரதேசத்தில் 103, மத்தியப்பிரதேசத்தில் 11426. இமாச்சலப்பிரதேசத்தில் 595, அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 44 ,  தாதர் நகர் ஹவேலியில் 58, சிக்கிமில் 70 பேர்.