சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில்,  ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில்,  இன்று  காலை நிலவரப்படி கொரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7117-ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக  364 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று காலை 9 மணி நிலவரம் தொடர்பாக பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில்,  டாப்லிஸ்டில் ராயபுரம் மண்டலம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1077 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தண்டையார்பேட்டை 610, அண்ணாநகர் 586, வளசரவாக்கம் 532, அடையாறு 391 பேருக்கு கொரோனா , அம்பத்தூர் 321, திருவெற்றியூர் 161, மாதவரம் 133, சோழிங்கநல்லூர் 101 பேருக்கு தொற்று,  மணலி 93, பெருங்குடி 92, ஆலந்தூர் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.