டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு 8,961 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தொங்கி உள்ளது. இதன காரணமாக, தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறறு  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்  புதிதாக  2,82,970 பேர் பாதித்துள்ளனர். மொத்த அதே போல், பாதிப்பு 3.79 கோடியை தாண்டியது.  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.87 லட்சத்தை தாண்டியது. தற்போது, நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்ட 18,31,000 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒமிக்ரான் தொற்று பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,961 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒமிக்ரான் பாதிப்பு 8,891 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 70 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, 8,961 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 0.79 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.