லக்னோ:
உத்தரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் நான்காம் கட்ட தேர்தலில் 116 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இது ஜனநாயகத்துக்கு பேராபத்து என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசத்தில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. நாளை 4 -ம் கட்ட தேர்தல் 53 தொகுதிகளில் நடக்கிறது.
இதில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 680. இவர்களில் 189 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்றும் 116 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு நாட்டில் நடைபெறும் தேர்தலில் 116 கிரிமினல்கள் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.