
மும்பை
விமான எஞ்சின் பழுதுக்கான எச்சரிக்கை அலார ஓசையைக் கேட்டு புறப்பட்ட உடனேயே இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு புரப்பட்டது. அந்த விமானத்தில் 188 பயணிகள் இருந்தனர். விமானம் கிளம்பிய உடனேயே விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. அதை ஒட்டி விமானத்தில் எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியது.
அதை உடனடியாக கவனித்த விமானிகள் உடனடியாக மும்பைக்கு திருப்பி தரை இறக்கினர். இந்த விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை உண்டாக்கியது. சமயோசிதமாக விமானிகள் மும்பைக்கு விமானத்தை திருப்பியதால் அனைவரும் உயிர் தப்பினார்கள்.
பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Patrikai.com official YouTube Channel