டில்லி:

நாட்டை உலுக்கி உள்ள வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி காரணமாக நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழியர்கள் 18 ஆயிரம் பேர் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி,பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி வரை மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.

இந்த மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மோசடி நடைபெற்றதாக கூறப்படும் பிஎன்பி வங்கிக்கு சீல் வைக்கப்பட்டும், மோசடிக்கு உதவி வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பிஎன்பி வங்கியில் பணியாற்றி வரும் 18 ஆயிரம் ஊழியர்கள் உடடினயாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 72 மணி நேரத்ததில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யபப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

[youtube-feed feed=1]