கான்கிரிட் மிக்சர் லாரி மூலம் லக்னோ செல்ல முயன்ற 18 புலம்பெயர் தொழிலாளர்கள்…வீடியோ…

Must read

மும்பை:
கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக  கான்கிரீட் கலவை எடுத்துச்செல்லும் வாகனத்தின் டேங்கரில் பதுங்கி தங்களது சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 16 பேரை மத்திய பிரதேச மாநில போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சம்பவத்தன்று  மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் 18 பேர் தங்களது சொந்தஊரான உ.பி. மாநிலம் செல்ல முயற்சி எடுத்தனர். இதற்காக காங்கிரிட் மிக்சர் லாரியை பிடித்து, அதில் உள்ள மிக்சர் டேங்கரினுள் அமர்ந்து சென்றனர்.
இவர்களை மத்திய பிரதேச மாநில எல்லையான இந்தூரில் மடக்கிய மாநில  போலீசார் லாரியை சோதனை நடத்தியபோது, மிக்சர் டேங்கரில் பலர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
அவர்களை டேங்கரில் இருந்து வெளியேற்றிய 18 பேரையும், கொரோனா, பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர்களை சட்ட விரோதமாக அழைத்து வந்த வாகனத்தின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வீடியோ உதவி: ANI

More articles

Latest article