சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை கடந்துள்ளது. 42 பேர்  உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 10,723 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 91 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 70,391 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில்6,533 பேர் ஆண்கள், 4,190 பேர் பெண்கள். தமிழகத்தில் 263 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 42 பேர் உயிரிழந்துள்ளார். 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,113ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,925 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,947 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் 31
செங்கல்பட்டு 954
சென்னை 3,304
கோவை 727
கடலூர் 183
தர்மபுரி 115
திண்டுக்கல் 195
ஈரோட் 226
கல்லக்குரிச்சி 61
காஞ்சீபுரம் 332
கன்னியாகுமரி 153
கருர் 80
கிருஷ்ணகிரி 227
மதுரை 276
நாகப்பட்டினம் 219
நாமக்கல் 147
நீலகிரி 43
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 57
ராமநாதபுரம் 58
ராணிப்பேட்டை 114
சேலம் 275
சிவகங்கை 54
தென்காசி 125
தஞ்சாவூர் 175
தேனி 92
திருப்பத்தூர் 59
திருவள்ளூர் 503
திருவண்ணாமலை 153
திருவாரூர் 119
தூத்துக்குடி 252
திருநெல்வேலி 309
திருப்பூர் 307
திருச்சி 311
வேலூர் 229
விழுப்புரம் 129
விருதுநகர் 123