டெல்லி: டெல்லி மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 2000 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லி நிஜாமுதினில் மசூதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் மலேசியா, இந்தோனேசியா, சவூதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களின் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட, 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1500 பேரில் 1200 பேர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு மறுநாள் ஊரடங்கு அறிவிக்கப்பட, அவர்கள் அனைவரும் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். 2000 பேரையும் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் போலீசார் தங்க வைத்துள்ளனர். அவர்களில் 280 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
தங்க வைக்கப்பட்டவர்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, இது பற்றிய விவரங்கள் உள்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்.
இதையடுத்து, அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளும் சீல் வைக்கப்பட்டு உள்ளன. மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன்களும் பயன்படுகின்றன.