சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தை தாண்டியுள்ளது.
bty

தமிழகத்தில் கொரோனா பரவலில் முதலிடத்தில் இருப்பது தலைநகர் சென்னை.  இன்று ஒரே நாளில் 1,747  பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 44,882 பேர் கொரோனா நோய் தொற்று குணமாகி  வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போதைய நிலையில் 24,052  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேலும் இன்று ஒரே நாளில்  30 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1082-ஆக உயர்ந்துள்ளது.
[youtube-feed feed=1]