சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 17,370 மெவாட் மின்சாரம் உபயோகிகப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

இந்திய மாநிலங்கள் அவற்றின் நிலக்கரி கையிருப்பை குறைந்தபட்சம் 24 நாட்களுக்காவது தேக்கி வைத்திருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் உள்ளது. ஆனால், தற்போது அதையும்  மீறி 9 நாட்களுக்கும் குறைவாக கையிருப்பு இருக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால், மத்தியஅரசிடம் சுமார் 1 மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பதாக தெரிவித்து உள்ளது.

தற்போது கோடை தொடங்கி உள்ளதால், மாநிலங்களின் மின்தேவைக்கு ஏற்ப நிலக்கரி தேவையும் அதிகரித்துள்ளது. போதுமான நிலக்கரி கிடைக்காமல், தமிழ்நால் அனல்மின் நிலையங்கள் முடங்கும் நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து, ரயில்மூலம் நிலக்கரி எடுத்துச்செல்லும் வகையில், பயணிகள் ரயில் சேவையை மத்தியஅரசு நிறுத்தி, நிலக்கரி குட்ஸ் சேவைகளை அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டுக்கும் தேவையான நிலக்கரி வந்துகொண்டிருப்பதால், மின்தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவு என்று தெரிவித்துள்ளது.