பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண். 17 வயது சிறுவன் வெறிச்செயல்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி 25 வயதான தீபா. இவர்களுக்கு 7 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். நடேசன் விவசாய வேலையில் இருக்கையில் அவர் மனைவி தீபா ஆடு மாடுகளை மேய்க்க செல்வார்.
சம்பவத்தன்று, ஆடு, மாடுகளை மேய்த்துவிட்டு அப்படியே துணிகளையும் துவைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கீரைக்காடு காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.. ஆனால் வெகு நேரமாகியும் தீபா வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதறி போன நடேசன் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடினார். அங்கும் காணாமல் உறவினர்களும் சேர்ந்து தீபாவை தேடினர்.. இரவெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் கீரைக்காடு காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் தீபாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்தன. வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது தீபாவின் உடம்பெல்லாம் கற்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தன. அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அருண் என்ற 17 வயது சிறுவன் தீபாவை பலாத்காரம் செய்து, கல்லாலேயே அடித்து கொன்றது தெரிய வந்துள்ளது. இப்போது இவரை போலீசார் கைது செய்து, மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
– லெட்சுமி பிரியா
Patrikai.com official YouTube Channel