சென்னை

நேற்று தமிழகத்தில் நடந்த 7 ஆம் கட்ட தடுப்பூசி முகாமில் 17.14 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா 2ஆம் அலை படிப்படியாக குறநிது வந்தாலும் விரைவில் 3 ஆம் அலை பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்ப்டட்டுள்ளது.  இதனால் நாடெங்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.  அதில் ஒரு பகுதியாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தியது. அப்படி ஐந்து முகாம்கள் நடந்தன

மக்களில் பலர் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் மற்றும் மது உட்கொள்வதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை எனத் தெரிய வந்தது.  எனவே சென்ற வாரம் முதல் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை மாற்றப்பட்டது.  சென்ற வாரம் 23 ஆம் தேதி நடந்த 6 ஆம் கட்ட முகாமில் 22.23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

நேற்று 7 ஆம் காட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் சுமார் 50000 இடங்களில் நடந்தன.  இதில் சென்னையில் 1600 முகாம்கள் நடந்துள்ளன.   இந்த முகாம்களில் சுமார் 17.14 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   இந்த பணியில் ஈடுபட்டோருக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.