சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதையடுத்து, வரும் 19ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா  பாதித்தோர் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 3,108 ஆக இருந்தது. இன்று புதிதாக 63 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு  3,171 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் 16ந்தேதி மாலை நிலவரப்படி,  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1501 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1576ல் இருந்து 1,639 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

[youtube-feed feed=1]