ஜெய்ப்புர்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு துறையின் உளவாளி கைது செய்யப்படுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் 42 வயதான முகமது பர்வேஸ் என்பவர். இவர் மீது ஏற்கனவே நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. டில்லியில் வசித்து வந்த பர்வேஸ் கடந்த 2017 முதல் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார். அதன் பிறகு விடுதலை ஆகி ஜெய்ப்புர் வந்த முகமது பர்வேஸ் ராஜஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
விசரணையின் போது முகமது பர்வேஸ் பாகிஸ்தான் புலனாய்வு துறையான ஐ எஸ் ஐ அமைப்பின் இந்திய உளவாளியாக பணி புரிந்தது தெரிய வந்தது. பர்வேஸ் தனது பேச்சு திறமையால் பல இந்திய ராணுவ வீரர்களுடன் தனது தவறான அடையாளத்துடன் நட்பை வளர்த்துக் கொண்டுள்ளார். அதன் பிறகு மெல்ல அவர்களிடம் இருந்து ராணுவ தகவலை அவர்களுக்கு அறியாமலே பெற்று அவற்றை பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்துள்ளார்.
கடந்த 17 வருடங்களில் பாகிஸ்தானுக்கு 18 முறை பயணம் செய்துள்ளார். ஐ எஸ் இ இவருக்கு இந்த ராணுவ ரகசியங்களை எடுத்துச் செல்ல பெரிதும் உதவி செய்துள்ளது. பர்வேஸ் பல போலி அடையாள்த்தில் சிம் கார்டுகள் பெற்றுள்ளார். அந்த நம்பர்கள் உதவியுடன் பாகிஸ்தான் செல்ல விசாவும் பெற்றுள்ளார். விசாரணையில் இந்த தகவல்களை அறிந்த காவல்துறை இவருக்கு சிம் கார்டுகள் விற்றவர்கள் குரித்து விசரணை நடத்தி வருகிறது.