சென்னை:
ள்ளிகளுக்கு வரும் 16ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தமிழ் வருட பிறப்பையொட்டி வரும் 14 ஆம் தேதியும், புனித வெள்ளியையொட்டி வரும் 15 ஆம் தேதியும் ஏற்கனவே அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை என்பதால் வரும் 16 ஆம் தேதி மட்டும் விடுமுறை அளித்து பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து வரும்16 ஆம் தேதியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக, மாணவர்களுக்கு தமிழ் வருடப்பிறப்பையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.