சென்னை: தமிழகம் முழுவதும்  விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக த 1614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 373 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை அறிவித்து உள்ளது. மேலும் 58 தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்றதாக தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.

காற்று மாசு, ஒலி மாசுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பட்டாசு தயாரிக்க, வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் வெடிவெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும், விதிகளை பட்டாசு வெடிப்பவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1614 பேர்மீது காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,சென்னையில் ராயப் பேட்டை, கீழ்பாக்கம்,அயனாவரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 373 வழக்குகள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று இரவு வரை 373 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். சென்னையில் 2020ம் ஆண்டு 428 வழக்குகளும், 2019ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது

தீபாவளி அன்று தமிழ்நாடு முழுவதும் 58 தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்றதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.