பின்லாந்து
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஒரு 16 வயது சிறுமி ஒரு நாள் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வன் என்னும் தமிழ்ப்படத்தில் கதாநாயகன் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகப் பதவி வகித்தது கற்பனைக் கதை ஆகும்.
ஆனால் நிஜத்தில் ஒரு சிறுமி பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.
பின்லாந்து நாட்டில் சன்னா மரின் என்னும் பெண் தலைவர் பதவி வகித்து வருகிறார்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர் ஒரு சிறுமியைப் பிரதமராக்கி உள்ளார்.
16 வயதான ஆவா முர்டோ என்னும் அந்த சிறுமிக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் இல்லாமல் பதவி வகித்துள்ளார்.
அவர் அந்த ஒரே நாளில் தொழில் நுட்பத்தில் பெண்கள் உரிமைகளை முன்னிலைப்படுத்தப் பல அரசியல்வாதிகளை சந்தித்துள்ளார்.
[youtube-feed feed=1]