புதுடெல்லி:
வறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16 சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இதனை அடுத்து அந்த சேனல்கள் முடக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

நாட்டின் மத நல்லிணக்கம் வெளியுறவு பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஆகியவற்றை 16 யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பிய நிலையில் இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 சேனல்கள் அடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது