சென்னை:சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய தேனி மாவட்ட மீனவர் பிரிவு துணைச்செயலாளர் அழகர்சாமி உள்பட 15பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்த்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்திக் கொள்கை – குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதிதத்தில் செயல்பட்ட காரணத்தால், கீழ்க்காணும் நபர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்பட் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Patrikai.com official YouTube Channel