சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 1,896 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 211 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை  25,88,781 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல சிகிச்சை பலனின்றி  இதுவரை 34,519 பேர் உயிர் இழந்துள்ளனர். அதேவேளையில்,  25,33,804  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று 211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து,   இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,41,194 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று  3 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை மொத்தம்  8,359 பேர் மரணம் அடைந்துள்ளனர்.கடந்தர 24 மணி நேரத்தில் மேலும்  221 பேர் குணம் அடைந்து, இதுவரை  மொத்தம் 5,30,724 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

15.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 34,91,107 பேருக்கும், 15.08.2021 அன்று 19,688 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

 

[youtube-feed feed=1]