சென்னை: தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அதிகபட்சமாக  சென்னையில் மட்டும் 2636 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.  தினசரி பாதிப்பு 2லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்புசிகள்  செலுத்தப்பட்டு வந்தாலும், கொரோனா பரவல் தீவிரமாகிக்கொண்டே வருகிறது.  இதன் காரணமாக, மக்கள் எச்சரிக்கையுடன் முக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்க  மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக  சென்னையில் இன்று 2636 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 5,783 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,71,384ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிக்கு சிகிச்சைப் பெற்று வந்த 33 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,032ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்று  பாதிப்பில் இருந்து  4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,96,759 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போது மருத்துவமனையில் 61,593 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 2636  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1526 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 11 பேர் பலியாகி உள்ளனர்.

மாவட்டம் வாரியாக இன்றைய பாதிப்பு:

அரியலூர் 22
செங்கல்பட்டு 795
சென்னை 2,636
கோவையில் 583
கடலூர் 102
தர்மபுரி 88
திண்டுக்கல் 92
ஈரோட் 132
கல்லக்குரிச்சி 56
காஞ்சீபுரம் 303
கன்னியாகுமரி 112
கரூர் 40
கிருஷ்ணகிரி 167
மதுரை 167
நாகப்பட்டினம் 130
நமக்கல் 109
நீலகிரி 48
பெரம்பலூர் 14
புதுக்கோட்டை 47
ராமநாதபுரம் 22
ராணிப்பேட்டை 179
சேலம் 214
சிவகங்கை 45
தென்காசி 74
தஞ்சாவூர் 151
தேனி 51
திருப்பதூர் 68
திருவள்ளூர் 453
திருவண்ணாமலை 125
திருவாரூர் 121
தூத்துக்குடி 277
திருநெல்வேலி 214
திருப்பூர் 227
திருச்சி 273
வேலூர் 167
விழுப்புரம் 54
விருதுநகர் 80

[youtube-feed feed=1]