புதுடெல்லி:
நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2023 – 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்களை வெளியிட்டார்.
அதில், நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றும், தமிழகத்தில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது. இந்த கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 11 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடியும், கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கான ₹2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 9 மடங்கு அதிகம்.
50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.