டெல்லி: 156-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் பிரதமர் மோடி உள்பட அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்காட்டில் ஜனாதிபதி திரௌபதி முர்மு. துணை குடியரசு தலைவர் தங்க, பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் காலை முதலே நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட மத்திய அமைச்சர், மாநில முதல்வர் உள்பட மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதுபோல, இன்று நாட்டின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்காட்டில் ஜனாதிபதி திரௌபதி முர்மு துணை குடியரசு தலைவர் தங்கர், பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அதிஷி உள்பட பலர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
[youtube-feed feed=1]