24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கொரோனா: லாவ் அகவர்வால் தகவல்

Must read

டெல்லி:
ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், சில மாநிலங்களில் இரட்டிப்பாகி வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துஉள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில்இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போதுதான் முதன்முறை.
மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
செய்தியாளர்கள்   உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின் பற்றி பணியாற்ற வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  17,265 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில்  நாடு முழுவதும் 36 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை   543 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத மாநிலமாக கோவா மாறியுள்ளது.
ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
புதுச்சேரி மஹே, கர்நாடாகாவின் குடகு,  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை.
இந்தியாவில் 59 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று  ஏற்படவில்லை.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு உள்ள கொரோனா பாதிப்பு   3.4 நாட்டிகளிலிருந்து 7.5  நாட்களாக இரட்டிப்பாகி உள்ளது.
கொரோனா தாக்கத்தில் இருந்து   14.75% மக்கள் மீண்டுள்ளனர்.  30 நாட்களுக்குபிறகு கொரோனா பல இடங்களில் இரட்டிப்பாகி வருசிகறது.
ஒடிசாவில் 39.8 நாட்களுக்கு பிறகும், கேரளா – 72.2 நாட்களுக்கு பிறகும், ஏறக்குறைய  20 நாட்கள் முதல் 30 நாட்களக்கு பிறகு, அதன் தாக்கம்  இரட்டிப்பாக்குகிறது

■ அந்தமான் & நிக்கோபார் – 20.1 நாட்கள்,
■ ஹரியானா – 21 நாட்கள்,
■ இமாச்சல பிரதேசம் – 24.5 நாட்கள்,
■ சண்டிகர் – 25.4 நாட்கள்,
■ அசாம் – 25.8 நாட்கள்,
■ உத்தரகண்ட் – 26.6 நாட்கள்
■ லடாக் (யூடி) – 26.6 நாட்கள்

கீழே உள்ள மாநிலங்களில், 20 நாட்களுக்கு குறைவான நாட்களிலேயேகொரோனா தாக்கம் இரட்டிப்பாகி வருகிறது.

■ டெல்லி – 8.5 நாட்கள்
■ கர்நாடகா – 9.2 நாட்கள்
■ தெலுங்கானா – 9.4 நாட்கள்
■ ஆந்திரா -10.6 நாட்கள்
■ ஜே & கே (யூடி) – 11.5 நாட்கள்
■ பஞ்சாப் – 13.1 நாட்கள்,
■ சத்தீஸ்கர் – 13.3 நாட்கள்
■ தமிழ்நாடு -14 நாட்கள்
■ பீகார் -16.4 நாட்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article