புது டெல்லி:
டெல்லியில் மளிகை சாமான்கள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கும் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக் காவலர்களிடமிருந்து தாக்குதல்களையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன. இது முன்னோடியில்லாத நெருக்கடியின் காலங்களில் கடுமையான சிரமத்திற்கு வழிவகுக்கிறது என்று ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிக்பாஸ்கட் நிறுவனத்தின் ஆன்லைன் பிரபலபடுத்தும் ஊழியர் கனேசன், கடந்த ஐந்து நாட்களில், ஆன்லைன் டெலிவரி செய்பவர்களை, காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.
அரசு முழுமையான நடவடிக்கை எடுத்த போதும், அத்தியாவசியமான பொருட்கள் வினியோகம் செய்ய த்டையில்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம், உணவு, பலசரக்கு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை டெலிவரி செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு யாரை அனுமதிப்பது, தடுப்பது என்ற மெக்கனிசம் தெரியவில்லை. பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்ப்வர்கள் காவல்துறையினரால் தாக்கப்படுகின்றனர். கேரளாவில், நோயாளிகளுக்கு சேவை செய்ய சென்ற சுகாதார துறையினர் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால், பொதுமக்கள் அச்சத்தில் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தங்களுடன் வந்த நண்பர்கள் போலீசாரால் அடிக்கப்படுவதை பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டே ஓடி விடுகின்றனர். அவர்களால் அந்த இடத்தில் எதுவுமே செய்ய முடியவில்லை. இதுபோன்ற டெலிவரி சேவைகளில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் அடிக்க வேண்டாம் என்றும் கணேஷ் தெரிவித்தார்.
இந்த கருத்தை ஆன்லைன் மளிகை சில்லறை விற்பனையாளர் க்ரோஃபர்ஸ் மற்றும் இறைச்சி விநியோக தளமான ஃப்ரெஷ் டோஹோம் ஆகிய நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள் வேண்டியிருப்பதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்களால் ஏற்படும் இடையூறுகள் உணவு பொருட்கள் வீணாவதற்கு வழிவகுத்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு, மளிகை மற்றும் பால் விநியோக வலைத்தளமான மில்க்பாஸ்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15,000 லிட்டர் பால் மற்றும் 10,000 கிலோ காய்கறிகளை கொட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. கேப்டன் க்ரூப்பின் கரண் நம்பியாரும் நொய்டா காவல்துறை குறித்த குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.