அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பு நாடு முழுவதும் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 17 வரை நன்கொடை வசூலித்தது.

வி.எச்.பி வசூலித்த ரூ. 22 கோடி மதிப்புள்ள சுமார் 15,000 காசோலைகள் வங்கியில் பணமில்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டுமான பணிக்காக மத்திய அரசு நியமித்த ஸ்ரீ ராம் ஜம்பூமி தீர்த் க்ஷேத்ரா அளித்த தணிக்கை அறிக்கையின்படி, வங்கி கணக்குகளில் பண பற்றாக்குறை, காசோலையில் பிழைகள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் இந்த காசோலைகள் திரும்பி வந்ததாக தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிழைகளை தீர்க்க வங்கிகள் செயல்பட்டு வருவதாகவும், மற்றவர்களை மீண்டும் நன்கொடை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அனில் மிஸ்ரா கூறினார்.

இந்த கட்டுமான பணிக்காக இதுவரை சுமார் 5000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது, இறுதி புள்ளிவிவரங்களை இந்த அறக்கட்டளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.