சென்னை:

மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வரும் நிலையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த  ,500 மருத்துவர்களை சென்னையில் தற்காலிகமாக பணியாற்ற தமிழக சுகாதாரத்துறை  அவசரமாக அழைத்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு தொற்றிக்கொள்கிறது. இதனால், அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு ஒரு சில மருத்துவர்கள் பலியாகி உள்ள நிலையில்,  மேலும் பல மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 1500 மருத்துவர்களை உடடினயாக சென்னைக்கு வர தமிழக சுகாதாரத்துறை அவர அழைப்பு விடுத்துள்ளது.