சென்னை:

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு சென்ன உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக அவர்களை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 2ந்தேதி,   மாலை தலைமை செயலகம் வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வனை போலீசார் தலைமை செயலகத்துக்குள் உள்ளே விட மறுத்த நிலையில், அவர்களை மீறி உள்ளே சென்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இ.பி.எஸ்.சின் உறவினர்களுக்கு மட்டுமே, நெடுஞ்சாலைத்துறைக்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ள தாகவும், இதன் மூலம் சுமார் 1500 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து,  போலீசார் அனுமதியை மீறி தலைமைச் செயலகத்திற்குள்  சென்றதாகவும், ஊழியர்களை  தாக்க முயன்றதாகவும் , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில்,  வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

இதன் காரணமாக இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.