மைசூரு

மைசூர் அருகே உள்ள அரசினகெரே கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான இரு நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள அரசினகெரே என்னும் சிற்றூர் உள்ளது.  இந்த சிற்றூரில் பூமிக்கடியில் இருந்து கொம்பு முளைத்தது போல ஒரு அமைப்பு தெரிந்து வந்தது.   இந்த பகுதி மக்கள் கடந்த 40 வருடங்களாக அதற்கு பூஜை செய்து வருகின்றனர்.    அப்பகுதி மக்களில் சிலர் அது நந்தி சிலையாக இருக்கலாம் என சந்தேகம் கொண்டனர்.  எனவே அதைத் தெரிந்துக் கொள்ள அந்த இடத்தை தோண்ட முடிவு எடுக்கப்பட்டது.

பொக்லைன் இயந்திரத்தின் மூலம் 15 அடி குழு தோண்டிய பிறகு அதில் இரு பழங்கால நந்தி சிலைகள் இருந்தது கண்டறியப்பட்டது.    அதையொட்டி தொல்துறை ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.   அங்கு விரைந்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இரு நந்தி சிலைகளையும் உடைக்காமல் வெளியே கொண்டு வந்தனர்.   இந்த இரு சிலைகள் 15 அடி மற்றும் 12 அடி உயரம் உள்ளவைகள் ஆகும்.

இந்த இரு சிலைகளும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.   இந்த சிலைகள் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இந்த சிலைகளை சாமராஜேந்திர உடையார் ஆட்சிக் காலத்தில் வெளியில் எடுக்க முயற்சி நடந்ததாகவும் கடும் மழை காரணமாக முயற்சி கைவிடப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆய்வு மேலும் தொடர்ந்து வருகிறது.