சமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தவுளி கங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப் பெருக்காக மாறி இருக்கிறது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்பு படை குழு விரைந்து சென்று பணியில் ஈடுபட்டு வருகிறது.
உத்தரகாண்டில் நந்ததேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் நீர் மின் திட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது. 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வருடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டுள்ளார். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பதற்கு பேரிடம் குழு கடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.