பெங்களூரு:
பெங்களுருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடத்தின் அருகே ஏற்பட்ட திடீர்தீ விபத்தில்150-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்தன.

பெங்களூரு எலகண்டா விமானதளத்தில் விமான கண்காட்சி நடக்கிறது. அப்போது கண்காட்சி நடக்கும் இடம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்தன.
எரிந்த கார்கள் அனைத்தும் விமான கண்காட்சியை காண வந்தவர்களுக்கு சொந்தமானவை.
இதனையடுத்து விமான கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் விமானங்கள் ஏதும் சேதமடைந்ததாக தகவல்கள் இல்லை.
Patrikai.com official YouTube Channel