சென்னை: 15வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளான். இந்த சம்பவம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்றுள்ளது.

சமூக வலைதளமான   இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் சென்னையில், 15 வயது சிறுவனால் 15 வயது  சிறுமி 5 மாதம் கர்ப்பம் அடைந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை  அதிகரிக்க சமூக வலைதளங்களே காரணம் என சமூக ஆர்வலர்களும், மருத்துவ நிபுணர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை அனைவரும் மொபைல் போன் மற்றும் இணையதளம் மூலம்  தங்களது பொன்னான நேரத்தை வீணடித்து வருகின்றனர். இதன் காரணமாக, பலர் பாலியல் போன்ற தவறான நடவடிக்கைகளில் அதிக கவனத்தை பெறுவின்றனர்.  இதுபோன்று சமூக வலைதளங்களை  தவறாகப் பயன்படுத்துபவர்களால்தான், அதிக குற்றங்கள் நடக்கின்றன. அதனால், சமூக வலைதளங்களை முறைப்படுத்த வேண்டும். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் புதிய கணக்குகளை ஆதார் போன்ற அடையாள அட்டைகளைப் பெற்ற பிறகே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இளைய சமூதாயம் சீரழிந்துவிடும்’’ என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் வரும் தம்பதிகளுக்கு  17 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.  தாய், தந்தையர் வேலைக்கு வெளியே சென்றுள்ள நிலையில்,  இவர்களின் பெண் குழந்தை மொபைல் போன் மூலம் சமூக வலைதளங்களில் மேய்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, அவரது இன்ஸ்டாகிராம் வழியாக 15 சிறுவன் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறிய நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து உறவாட தொடங்கினார்.  வீட்டில் பெற்றோரும் இல்லாததால், அவர்களின் தனிமை சந்திப்பு எல்லை மீறியது. இதனால், அந்த சிறுமி கர்ப்பமடைந்தாள்.

இந்த செயலை அறிந்த அக்கம் பக்கத்தினர், இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோரிடம் பல முறை கூறியும், அவர் தனது மகள்மீதான நம்பிக்கையில், அதை கண்டு கொள்ளாத நிலையில், சிறுமியின் வயிறு பெரிதாகி வருவதை சிலர் சுட்டிக்காட்டினர். மேலும், இதற்கு காரணம், ஒரு சிறுவனாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இதை  சற்றும் எதிர்பாராத தாய் அதிர்ச்சியடைந்து மகளை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது.

அதன்பிறகே தனது மகள் கர்ப்பமானது  குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்வி கற்க வேண்டிய வயதில் கள்ள உறவால் கர்ப்பம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.