சென்னை: பிக்பாஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் விசிகவை சேர்ந்தவர் என்பது, பிக்பாக் இறுதிபோட்டியின்போதுதான் தெரிய வந்தது. இநத் நிலையில், விக்ரமன் 15பெண்களை ஏமாற்றி இருப்பதாக, அவரது பெண் நண்பரான  சமூக செயற்பட்டாபாளர் வழக்கறிஞர் கிருபை முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நடத்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன்.  இவர் அந்த நிகழ்ச்சியின் இறுதிவரை சிறப்பாகவிளையாடி வந்தார். இறுதி போட்டியின்போதுதான் அவருக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன், வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, அவர் ஒரு கட்சியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இது  சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர்தான் விக்ரமன்   விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருப்பது ரெதரிய வந்தது.

இந்த நிலையில்,  விக்ரமன் தன்னை ஏமாற்றி விட்டதாக சமூக செயற்பாட்டாளரும், பெண் வழக்கறிஞருமான கிருபை முனுசாமி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சுமத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், தன்னை  கடந்த 2 ஆண்டுகளாக விக்ரமன் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் பழகியவதாகவும், ஆனால், தற்போது திருமணம் செய்ய மறுத்து என்னை ஏமாற்றி உள்ளார். மேலும்,  தன்னை பலமுறை ஜாதி ரீதியாக  பேசி அசிங்க படுத்தி இருப்பதாக தெரிவித்து, அதுதொடர்பான,  ஸ்கிரீன் ஷாட்டுகள்  வெளியிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, விக்ரமன் பெண்களை ஏமாற்றுபவர், அவரிடம் திருமணமான பெண்கள் உள்பட சுமார் 15 பெண்கள் ஏமாந்துள்ளனவர் என்று குற்றம் சாட்டும்  கிருபை முனுசாமி  விக்ரமனால் மிகுந்த மனவேதனை அடைந்த நான் தற்கொலை நிலைக்கு சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னை விக்ரமன் ஏமாற்றி உள்ளது குறித்து, குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறி உள்ளார்.

விக்ரமனின் பெண் தோழி, வழக்கறிஞர் கிருபை முனுசாமியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.