டெல்லி:

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்த பரவிய கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இத்தாலியில் இந்தியா வந்துள்ள சொகுசு கப்பலான கோஷ்டா விக்டோரியா  கொச்சி அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் 305 இந்திய பயணிகள் உள்பட மொத்தம் 459 பேர் பயணம் செய்தனர். இந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை நடைபெற்றது.

இதில், 15 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தனிப்படுத்தப்பட்ட அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் ஜப்பானுக்கு வந்த டயமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் வந்த ஏராளமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வந்துள்ள சொகுசு கப்பலிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.