சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்குவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகிறார்கள்.  அவர்களில் பலர்  பல மின்இணைப்புகளை வைத்து, முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.  இதையடுத்து, திமுக அரசு, அதை ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதாக கூறி,  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்கான     பணிகள் கடந்த ஆண்டு (2022)  நவம்பர் மாதம் தொடங்கியது.

இதற்கு டிசம்பர் 30ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மொத்தமுள்ள 2.67 கோடி பேரில் இதுவரை (76 நாட்களில்) 2.42 கோடி பேர் ஆதார் எண்ணுடன் மின்இணைப்பு எண்ணை இணைத்துள்ளனர் என்று கூறியதுடன், இதுவரை இணைக்காதவர்கள் உடனே இணைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.