டெல்லி:
15 நிமிடம் வெயிலில் நின்றால் கொரோனா குணமாகும் என்று மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் (மாநிலம்) அஸ்வினி குமார் சவுபே கூறி உள்ளார்… இது பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது…
வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளை மிரட்டி வருகிறது. நாளுக்கு நாள் அதிக அளவிலான பலிகளை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸை ஒழிக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்போதுதான் அமெரிக்கா உள்பட பல நாடுகள் நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், நமது மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர், புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு உள்ளார்….
வெயிலில் பத்து பதினைந்து நிமிடங்கள் நின்றால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறுகிறார் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே…
மத்திய அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை எழுப்பி உள்ளது…
ஏற்கனவே மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனா குணமாகும் என்று உதார் விட்டு வரும் பாஜகவினர், தற்போது அதற்கு ஒருபடி மேலாக, வெயிலில் நின்றால் கொரோனா குணமாகும் என்று தெரிவித்துள்ளனர்…
பொதுவாக ஒருவர் வெயிலில் நின்றால் வைட்டமின் டி அதிகரிக்கும்.. இதனால் ஒருவரது நோய் எதிர்ப்பு சக்தி கூடும் வாய்ப்பு உள்ளது…
ஆனால், இதன்மூலம் கொரோனா போன்ற நோய் தோற்று சரியாகுமா என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த இணை அமைச்சரே இவ்வாறு தெரிவித்துள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்…