பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே மாதத்தில் நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 15 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் விடுபட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து 16 தொகுதிகளில் மட்டும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டது. இதில், யேமகனமார்டி தொகுதியில் 4372, பெல்காம் ரூரல் 5577, கிட்டூர் 3942, பைலாஹோங்கல் 4148, சவுந்தத்தியெல்லம்மா 4104, பிடர் 13,295, ஹூப்ளி தார்வாத் கிழக்கு 11,981.

சீனிவாசப்பூர் 2134, பங்காரபெட் 9800. ஹெப்பால் 10,801, புலகேசிநகர் 21,831, சிவாஜிநகர் 8002, பத்மநாபாநகர் 7656, பி.டி.எம் லேஅவுட் 7407, ஜெயநகர் 7979, சன்னபாட்னா 5062 என மொத்தம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 91  இஸ்லாமிய வாக்காள்கள் பெயர் விடுபட்டுள்ளது. இவர்களுக்கு வாக்காள் அடையாள அட்டைகளும் இல்லை. இவர்கள் விடுபட்டது குறித்து எந்த அரசியல் கட்சிகளும் கவலை அடையவில்லை.

அபுசலே ஷரீப் தலைமையிலான வளர்ச்சி கொள்கைளுக்கான விவாதம் மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இதை கண்டுபிடித்தது. மாநில சிறுபான்மை ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தற்போது அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.